பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 30 May 2017

பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்

பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.மாணவ,மாணவியரின் விருப்பம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம்.
ஒரு மாணவன் தன்னுடைய தாயாரின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ குறிப்பிடுவது என்பது மாணவன் அல்லது மாணவியின் விருப்பம். இந்த கருத்தினை நாங்கள்ஏற்று கொண்டுள்ளோம். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதற்கான பணியை பல்கலை கழக மானிய குழு மேற்கொள்ளும் என கூறினார். மேனகா கடிதம் ஒரு மாணவன் தனது பட்டப்படிப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் என்ற விதி உள்ளது. இதற்கு கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் தாயார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விதியைமாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜாவடேகருக்கு கடந்த மாதம் மேனகா காந்தி கடிதம் எழுதினார்.தனது கடிதத்தில், தங்களது கணவர்களிடம் இருந்து பிரிந்து வசிக்கும் பல்வேறு பெண்கள் என்னை அணுகினர். அவர்கள், தங்களது குழந்தைகளின் சான்றிதழ்களை தந்தையின் பெயர் இல்லாமல் பெறுவதில் பல இன்னல்களை சந்தித்துள்ளனர் எனதெரிவித்துள்ளார்.

மேலும், திருமண முறிவுகள் மற்றும் கணவன் மற்றும் மனைவி இடையே பிரிவு என்பது தற்பொழுது உண்மை நிலையாகி விட்டது. இதனை பிரதிபலிக்கும் வகையில் விதிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து விளக்கமுடன் எழுதியிருந்தார்.அதோடு தனியாக அல்லது பிரிந்து வாழும் தாயாரின் உணர்வை கருத்தில் கொண்டு, விதிகள் அல்லது வழிகாட்டி முறைகளை மாற்றுவதற்கான வழிகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 திருத்தம் கடந்த வருடம் மேனகா காந்தி முன்வைத்த ஆலோசனையின் பேரில் பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் மத்திய வெளிவிவகார துறை அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்தது. தனியாக அல்லது பிரிந்து வாழும் பெற்றோர் தங்களது குந்தைகளின் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்கும் பொழுது அதில் இருவருக்கு பதிலாக ஒருவரது பெயரை குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot