திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகும் பதிவு செய்யலாம்: சட்டப் பேரவையில் மசோதா தாக்கல். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 29 June 2017

திருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகும் பதிவு செய்யலாம்: சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்.

திருமணம் முடிந்து 5 மாதங் களுக்கு பின்னரும் அதை பதிவுசெய்யும் வகையில், திருமண பதிவுத் திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.சட்டப்பேரவையில் திருமண பதிவு திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அறிமுகம் செய் தார்.
இதற்கான நோக்க காரண விளக்க உரையில் கூறியிருப்ப தாவது:

2009-ம் ஆண்டு சட்டம்தமிழகத்தில் அனைத்து திரு மணங்களையும் கட்டாயமாக பதிவு செய்வதற்காக கடந்த 2009-ம் ஆண்டு திருமணங்களை பதிவு செய்தல் சட்டம் கொண்டுவரப் பட்டது. இச்சட்டத்தின்படி திரு மணம் செய்துகொண்ட தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் அல்லது அதற்குமேல் 60 நாட்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி, திருமணம் செய்தவர்கள் தங்கள்விவரக்குறிப்பை பதிவாளரிடம் அளிக்க வேண்டும்.உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்இந்நிலையில், 150 நாட்கள் அதாவது 5 மாதங்களுக்குமேல், கூடுதல் கட்டணம் செலுத்தி திருமணத்தை பதிவு செய்வதற் கான வழிமுறைகளை செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதேபோல, சிறப்பு நிகழ்வுகள் தவிர பதிவாளர் முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள், நேரடி யாக வராமல் சட்ட அடிப்படையில் திருமண பதிவு செய்யக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. திருமண பதிவுச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மதகுரு என்னும் சொல் அனைத்து மதங்களின் நபர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் அடிப்படையில், சரியான வகையில் திருமண பதிவுச் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதாவை அறிமுக நிலை யிலேயே எதிர்ப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர் தெரிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் அடிப்படையில், சரியான வகையில் திருமண பதிவுச் சட்டத்தை திருத்த அரசு முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot