அரசு மருத்துவமனைகளில் 1,824 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 4 July 2017

அரசு மருத்துவமனைகளில் 1,824 புதிய மருத்துவர்கள் விரைவில் நியமனம்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு 1,824 மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்கள் என 20,862 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிகழாண்டில் 1,224 மருத்துவர்கள், 600 சிறப்பு உதவி மருத்துவர்கள், 1,010 செவிலியர்கள், ஆயுஷ் துறையில்137 உதவி மருத்துவ அலுவர்கள், 333 மருந்தாளுநர்கள், 1,234 ஆய்வுநுட்புனர்கள், 179 இதய வரைபட நுட்புனர்கள், இயன்முறை நிபுணர்கள், நுண்கதிர் நிபுணர்கள் மற்றும் விழிஒளி பரிசோதகர்கள் ஆகியோர் பணியமர்த்தப்படுவர்.

பணியிடங்கள் உருவாக்கல்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.9.75 கோடி செலவில் பல்வேறு நிலைகளில் 366 பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உதவி பேராசிரியர் உள்பட 9 பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். 14 அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு முன்பான கவனிப்பு வார்டுகள், 12 அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கான கவனிப்பு வார்டுகள் ரூ.5.23 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு, 123 செவிலியர்கள் பணியிடங்களுடன் உருவாக்கப்படும்.
திருநெல்வேலி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தாய் சேய் நலப்பிரிவுகளுக்கு 7 மகப்பேறு மருத்துவர்கள், 2 குழந்தைகள் நல மருத்துவர்கள், 3 மயக்கவியல் மருத்துவர்கள் மற்றும் 20 செவிலியர்கள் ஆண்டுக்கு ரூ.2.40 கோடி தொடர் செலவில் நியமனம் செய்யப்படுவர். திருச்சியில் விபத்து மற்றும் உயர்சிறப்பு மருத்துவமனைக்கு கூடுதலாக 21 மருத்துவர்கள், 30 செவிலியர் பணியிடங்கள் ரூ.2.19 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தீவிர இதய சிகிச்சை, மூப்பியல் மற்றும் நரம்பியல் பிரிவுகளுக்கு ரூ.2.68 கோடி செலவில் 32 பொது மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot