பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 22 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கியது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 16 July 2017

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 22 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கியது.


பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப் பட்டது.ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக் கட்டளையின் 38-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

 இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.விழாவில் சிவகுமார் பேசிய தாவது:கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால், உடம்பு ஆரோக்கியத்தை காக்க வேண்டும். லட்சிய நோக் கத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும். கல்வியும் ஒழுக்கமும் வேண்டும். இதை கடைபிடித்தால் உங்களை யாராலும் தடுக்க முடியாது.கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா - அம்மாவுக்கு படிப் பில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. உங்களை எல்லாம்விட மிகவும் மோசமான சூழ்நிலையில் பிறந்தவன் நான். என்னைவிட 100 மடங்கு பெரிய ஆளாக நீங்கள் வரலாம்.இவ்வாறு சிவகுமார் பேசினார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, ‘‘கல்வி என்பது மதிப்பெண் வாங்குவதில் மட்டுமே இல்லை. அறிவுக்கூர்மை தேவை. தற்போது விளையாட்டில் முதல் ஆளாக வந்தவர்கள், கண்டுபிடிப்புகளில் பெரிய ஆளாக வந்தவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் கொடுத் திருக்கிறோம். ஆகையால் இந்த விழா மிகவும் நிறைவாக இருக் கிறது.

 ‘நான் இதில் சாதிப்பேன்’ என நினைத்தால் கண்டிப்பாக முடியும். சாதிக்க வேண்டும் என்று நம்புங்கள். நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப் பதற்குத்தான்’’ என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot