கலை அறிவியல் கல்லூரிகளில் 250 புதிய பாடப்பிரிவுகள்

''நடப்புக் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 250 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர,் அன்பழகன் தெரிவித்தார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், அமைச்சர் அன்பழகன், நிருபர்களிடம் கூறியதாவது
: இந்த கல்வியாண்டில், கலை அறிவியல் கல்லுாரிகளில், அதிகமாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதனால், புதிதாக, எட்டு இடங்களில் கலை அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. பல்கலைகளுக்கு உட்பட்ட, மூன்று உறுப்புக் கல்லுாரிகளும் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. இக்கல்லுாரிகளில் இக்கல்வியாண்டுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. கலை அறிவியல் கல்லுாரிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததால், இந்தாண்டு புதிதாக, 250 பாடப்பிரிவுகளும், உறுப்புக் கல்லுாரிகளில், 89 பாடப்பிரிவுகளும் துவங்கப்பட உள்ளன. அந்தந்த கல்லுாரிகளில் முதுகலை வகுப்புகளும் துவங்கப்படஉள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
 

Most Reading