அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப் படிப்பில் சேர விண்ணப்பம்: இன்று முதல் விநியோகிக்கப்படும் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 1 August 2017

அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப் படிப்பில் சேர விண்ணப்பம்: இன்று முதல் விநியோகிக்கப்படும்

அரசு சட்டக் கல்லூரிகளில் முது கலை சட்டப் படிப்பில் (எல்எல்எம்) சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.இதுதொடர்பாக மாநில சட்டக் கல்வி இயக்குநர் என்.எஸ்.சந் தோஷ் குமார், வெளியிட்டுள்ள ஓர்அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங் கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18-ம் கல்வி ஆண்டில் எல்.எல்.எம். (முதுகலை சட்டம்) படிப்பில் சேருவதற்கு ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) முதல் 18-ம் தேதி வரை விண்ணப்பம் வழங் கப்படும். அலுவலக வேலைநாட் களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்குறிப்பிட்ட அரசு சட்டக் கல் லூரிகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். விண்ணப்பக் கட்டணத்தை “The Director, Directorate of Legal Studies, Chennai-10” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுத்து சம்பந்தப்பட்ட அரசு கல்லூரியின் முதல்வருக்கு கோரிக்கை கடிதத்துடன் சமர்ப் பித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் சான்றொப்பமிடப்பட்ட சாதி சான்றிதழ் நகலை வேண்டுதல் கடிதத்துடன் இணைக்க வேண் டும். விண்ணப்பத்தை தபால் பெற விரும்புவோர் ரூ.80-க் கான தபால்தலை ஒட்டப்பட்ட, சுயமுகவரி எழுதப்பட்ட பெரிய தபால் உறையை டிமாண்ட் டிராப்ட் மற்றும் கோரிக்கை கடிதத்துடன் இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு 18-ம் தேதி ஆகும்.

வேலூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் எல்எல்எம் படிப்பு இல்லை என்ற போதிலும் அப்பகுதி மாணவர்களின் வசதி யைக் கருத்தில்கொண்டு அங்கும் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot