இணையதள விளையாட்டு: மாணவர்களைக் கண்காணிக்க கல்வித் துறை அறிவுரை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 1 September 2017

இணையதள விளையாட்டு: மாணவர்களைக் கண்காணிக்க கல்வித் துறை அறிவுரை

இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்தும்போது தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கண்காணிப்பது அவசியம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

அண்மைக் காலங்களில் மாணவர்கள் இணையதளங்களில் மன அழுத்தம் தரும் விளையாட்டுகளை விளையாடுவதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
எனவே மாணவர்கள் இணையதளத்தினை சிறந்த முறையில் பயன்படுத்த கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

வழிகாட்டுதல்கள்: மாணவர்கள் கணினிகள் அல்லது செல்லிடப்பேசிகள் மூலம் இணையதளங்களில் உள்ள தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தி விளையாடுவதை தவிர்ப்பது தொடர்பாக அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் தினமும் நடைபெறும் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தலைமையாசிரியர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.
இதனால் ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்பை பள்ளி அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். புத்தகம் வாசித்தல், உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டுத் திடலுக்குச் சென்று விளையாடுவதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கலந்துரையாட வேண்டும்.
மாணவர்கள் கணினியைப் பயன்படுத்தும்போது பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அருகில் சென்றால் இணையதள முகவரிகளை மாற்ற முற்படுகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

இணையதளம் மற்றும் குறுஞ்செய்தியைப் பயன்படுத்திய பின்னர் தனிமையில் மாணவர்கள் இருத்தல் மற்றும் அவர்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். செல்லிடப்பேசிகளில் திடீரென அதிகளவில் புதிய எண்கள் மற்றும் இணையதள முகவரிகளில் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

மாணவர்கள் சரியான இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் மென்பொருளை கணினியில் உட்படுத்த வேண்டும்.
குழந்தை நல ஆலோசகர்களைக் கொண்டு இணையதள வசதியினை மாணவர்கள் உபயோகிப்பது குறித்து பயிற்சி வகுப்புகளை பள்ளிகளில் நடத்த வேண்டும். தலைமையாசிரியர்கள் கூட்டத்திலும் மாணவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைத் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது: பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கையின்படி வியாழக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
இதில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக விலை உயர்ந்த ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது.

அவற்றில் 'கேம்' கள் விளையாடுவதை பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது.
செல்லிடப்பேசி மற்றும் ஆன்-லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு அடிமையாவதால் அவர்களது மன நலன் பாதிக்கப்படுகிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும் என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot