ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 6 September 2017

ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு பெற்ற தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடம் தேவையான அளவுக்கு ஏற்படுத்தப்பட வில்லை என்றும், பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பள்ளி களில்,ஆசிரியர் நியமனம் குறித்து, வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன் விபரம்: பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இந்த விதிகளை, பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, 1 - 8ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்க, ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளி யில் பயிற்சிகள் நடத்துவது அவசியம். 10 சதவீதத்திற்கு மேல் காலியிடங்கள் இல்லாமல், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 60 வயதில் ஆசிரியர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும், 'டிஜிட்டல்'பரிவர்த்தனை முறையில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot