2011- 2015 வரையிலான காலகட்டங்களில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை: நவ.21-ம் தேதி கடைசி நாள் என அரசு அறிவிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 25 October 2017

2011- 2015 வரையிலான காலகட்டங்களில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை: நவ.21-ம் தேதி கடைசி நாள் என அரசு அறிவிப்பு

விடுபட்டுபோன வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை புதுப்பிக்க அரசு அளித்துள்ள சிறப்பு சலுகைக்கான காலக்கெடு நவம்பர் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் கல்வித் தகுதியை பதிவுசெய்துள்ளவர்கள் 3 ஆண்டு களுக்கு ஒருமுறை தங்கள் பதிவுமூப்பை (சீனியாரிட்டி)புதுப்பித்து வர வேண்டும். அப்போது பதிவுமூப்பு நடப்பில் இருக்கும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும்.

இந்தநிலையில், கடந்த 2011 ஜனவரி முதல் 2015 டிசம்பர் வரையுள்ள காலகட்டத்தில் பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு அரசு சிறப்பு சலுகை வழங்கியது.அதன்படி, பதிவுமூப்பை புதுப்பிக்கத்தவறிய பதிவுதாரர்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ள கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியில் இருந்து 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்தசலுகையை பயன்படுத்தி, பதிவுதாரர்கள் விடுபட்டுபோன தங்கள் பதிவுமூப்பை புதுப்பித்து வருகிறார்கள்.

காலக்கெடு நவம்பர் 21-ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் அதற்குள் ஆன்லைன் (www.tnvelaivaaippu.gov.in/Empower) மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றோ பதிவை புதுப்பித்துக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot