பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 28 October 2017

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெற வசதியாக அனைத்து மாவட்டத்திலும் கல்விக் கடன் முகாம்களை  நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:


பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் அறிவிப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை ெதாடர தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்  மூலம் கல்விக் கடன் பெற ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கு ஏற்ப மாவட்டந்தோறும் கல்விக் கடன் முகாம் நடத்த  கடந்த 25ம் தேதி அரசு உத்தரவிட்டது.

அதன்படி மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழுக்கள் அமைக்கவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவுக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்  தலைவராக இருப்பார்.

மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்கப்படும். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். கல்விக் கடன் முகாம்கள்  ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு மேனிலைப் பள்ளி அல்லது அரசு உதவி பெறும் மேனிலைப் பள்ளி, தனியார் பள்ளிகளில் நடத்தப்படும்.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர் முகாம்களில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் உயர்கல்வி பயில தேவைப்படும் கடன் பெற  விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுதுறையின் கீழ் செயல்படும் மத்திய உயர்கல்வி துறையால் நடத்தப்படும் வித்யாலட்சுமி  (www.vidyalakshmi.co.in) என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

இந்த இணைய  தள கடன்  சேவையில் மொத்தம் 81 வகையான கல்வி கடன்கள் வழங்கப்படுகிறது. இவற்றை 42 வங்கிகள் வழங்குகின்றன. தற்ேபாது உயர் கல்வி  நிறுவனங்களில் சேர்க்கை முடிந்துவிட்டதால், வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது கடன் பெற்றுத்  தர  மாவட்டக் குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முகாம்களை நடத்த வேண்டும். இவ்வாறு  பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot