வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு விடுபட்டவர்கள் சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் 21-ம் தேதி வரை புதுப்பிக்கலாம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 16 November 2017

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு விடுபட்டவர்கள் சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் 21-ம் தேதி வரை புதுப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு விடுபட்டவர்கள் சிறப்பு சலுகை திட்டத்தின்கீழ் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசம் வரும் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை 1 லட்சத்து25 ஆயிரம் பேர் தங் கள் பதிவை புதுப்பித்துள்ளனர்.
மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைவாய்ப்புக் காக தங்கள் கல்வித்தகுதியை பதிவுசெய்து வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பித்து வர வேண்டும். அப்போது தான் அவர்களின் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். தற்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப் படையில் அரசு பணிநியமனங்கள் நடைபெறவில்லை என்றாலும்கூட அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பின்போது பதிவுமூப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் அளிக்கப்படுகிறது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ளபதிவு தாரர்கள் தங்கள் பதிவுமூப்பை குறிப்பிட்ட தேதிக்குள் புதுப்பிக்காத சூழலில் அவர்கள் விடுபட்டுபோன பதிவை புதுப்பித்துக்கொள்ள அவ்வப்போது சிறப்பு சலுகை திட்டம் அளிக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், 1.1.2011 முதல் 31.12.2015வரையிலான காலகட்டத்தில் பதிவுமூப்பை புதுப்பிக்கத் தவறியவர் களுக்கு தமிழக அரசுசிறப்பு சலுகை அளித்திருந்தது.

அதன்படி, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவுமூப்பு விடுபட்டு போனவர்கள் இந்த சிறப்பு புதுப்பித்தல் சலுகையைப் பயன்படுத்தி புதுப்பித்து வருகிறார்கள். இதுவரையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் தங்கள் பதிவுமூப்பை இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் பதிவுசெய்து பயன் அடைந்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, சிறப்பு சலுகைதிட்டத்தின் கீழ் பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கான காலஅவகாசம் நவம்பர் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது.

 பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பதிவை புதுப்பிக்கலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவும் புதுப்பித்துக்கொள்ளலாம். எனவே,மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் பதிவுமூப்பு விடுபட்டவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, பதிவுமூப்பை புதுப்பித்துக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot