வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 17 March 2018

வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்


உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலிருந்தே இரண்டிற்கும் பொதுவாக பல அப்டேட்களை வெளியிட்டு வந்துள்ளது.அதன்படி இந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் அதன் பொதுவான கருத்துக்களைப் பதிவிட, ஒரு குரூப்பின் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அதற்கு சிறு விளக்கத்தை பதிவிடுவதற்கு ஏதுவாக description என்ற வசதியை புதிதாக இணைத்துள்ளனர். இதற்கு முன்னதாக பயனர்கள் ஸ்டேட்டஸ் மூலம் அவர்களின் நிலையை உணர்த்தும் விதத்தில் ஒரு வசதி செயல்பட்டு வருவதைப் போல் இந்த வசதியும் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு குரூப்பில் உள்ள பயனரை தேடிக் கண்டறியும் வசதி மற்றும்வாய்ஸ் காலின் இடையே அதனை வீடியோ காலாக மாற்றம் செய்து கொள்ளும் வசதியையும் இதனுடன் ஃபேஸ்புக் நிறுவனம் இணைத்துள்ளது.

இந்த சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் முதல் முயற்சி செய்து வந்துள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அப்டேட்டில் இந்த வசதிகள் வெளியாகி உள்ளது. வெர்ஷன் 2.18.54 பயன்படுத்தும் நபர்கள் இந்த வசதிகளைப்பெற்றுக்கொள்ள இயலும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot