ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை ஏன்? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 9 March 2018

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை ஏன்?

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அத்தேர்வு மூலமாக 3,375 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இல்லாததால் 1,060 பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இந்த காலியிடங்களையும் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களையும் சேர்த்து, புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது: "அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. உபரி ஆசிரியர் பணியிடங்களையும் ஆய்வுசெய்து காலியிடங்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும்" என்றார். இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,405 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பாடவாரியான காலியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு: தமிழ் - 349; ஆங்கிலம் - 273; கணிதம் - 490; அறிவியல் - 773; சமூக அறிவியல் 520. இந்த காலியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பதவியில் உள்ள காலியிடங்களும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot