சென்னையில் ‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி கண்காட்சி 14, 15-ந் தேதிகளில் நடக்கிறது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 4 April 2018

சென்னையில் ‘தினத்தந்தி’ வழங்கும் கல்வி கண்காட்சி 14, 15-ந் தேதிகளில் நடக்கிறது

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று தேர்வு செய்வதுதான் வாழ்க்கையின் திருப்பு முனையாகும்.
அவர்களுக்கு உதவும் விதமாக, தினத்தந்தி வழங்கும் கல்வி கண்காட்சி-2018 நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 14, 15 ஆகிய தேதிகளில்நடைபெறுகிறது.

இந்த கல்வி கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 70-க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு படிப்பிலும் இருக்கக்கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பற்றிய அனைத்து விபரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள், அவர்களது சிறப்பம்சங்கள், பயிற்றுவிக்கப்படும் படிப்புகள், அதற்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் அளிக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களது உயர் கல்வி குறித்த அனைத்து விவரங்களையும் இந்த கண்காட்சியில் பெறுவதோடு, மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கட்டண விவரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை விபரங்கள் போன்றவற்றையும் கண்காட்சி அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய படிப்புகள்

காலத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் அறிமுகமாகி வரும்புதிய படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி இந்த கண்காட்சியின் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் பெற்றோர்களும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு, மாணவர்களின் விருப்ப பாடங்கள் பற்றியும், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். உடனடி வேலை வாய்ப்புகள் கொண்ட படிப்புகள் பற்றி அறிந்து, அவற்றை அருகில் உள்ள கல்வி நிறுவனத்திலேயே பெறுவதற்கும் இந்த கண்காட்சி ஒரு வாய்ப்பாகும்.இந்த கல்வி கண்காட்சியை சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், வேல்ஸ்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம், கலசலிங்கம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், செயிண்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மீனாட்சி கல்வி நிறுவனங்கள் மற்றும் ரெமோ சர்வதேச விமான கல்வி நிறுவனம் ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து நடத்துகின்றன. கண்காட்சியானது காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot