Flash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 26 April 2018

Flash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.
ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார்.தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளமும் அதற்கு முன் பணியில் இணைந்தவர்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. ஆறாவது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது.

 இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தி வந்தனர். கடந்த நாட்களாக நடைபெற்ற இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்துஅமைச்சர் செங்கோட்டையனுடன் கிண்டியில் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் பழச்சாறு அருந்தி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot