12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 27 May 2017

12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு!

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000 அது பின்னர் 2007 ஆம் ஆண்டில் ரூ.7000 உயர்த்தப் பட்டது.

தற்போது இப்படி தற்காலிகமாக நியமிக்கப் பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குரிய வகையில் சம்பள உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சேவை ஊக்கத் தொகைகள் முதலியவற்றைப் பெற்றுத் தரும் வகையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

10 comments:

  1. மகிழ்ச்சி...

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி......

    ReplyDelete
  3. exam illaya? exam mulam nirappappadum endru sonnathu poiya?
    i want exam

    ReplyDelete
  4. இதய பூர்வ நன்றி

    ReplyDelete
  5. பகுதி நேர ஆசிரியர்களுக்கு நன்மை தரும் செய்தியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. ஐந்து ஆண்டுகளாக குறைவான ஊதியம் பெற்று குடும்பமும் நடத்த முடியாமல் பல இன்னல்களையும் சந்திக்கும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் 12000 குடும்பங்களின் புண்ணியம் இந்த அரசையேச் சேரும்.

    ReplyDelete
  7. Waiting last 15 years late but good news

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot