நடப்பாண்டு முதல் பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு: அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 23 May 2017

நடப்பாண்டு முதல் பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு: அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

நடப்பாண்டு ( 2017- 2018 கல்வியாண்டு) முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதற்கான அரசாணையை வெளியிட்ட பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:
''மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்களுக்கான மதிப்பெண்ணை 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தை 3 மணியில் இருந்துஇரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செய்முறைத்தேர்வு உள்ள பாடங்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதிவந்த மாணவர்கள் இனிவரும் தேர்வுகளில் ஆண்டுக்கு 70 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். செய்முறைத்தேர்வு இல்லாத பாடங்களுக்கு 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இனிவரும் தேர்வுகளில் ஆண்டுக்கு 90 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.பிளஸ் 1 வகுப்பில் செய்முறைத் தேர்வும், பிளஸ் 2 வகுப்பில் பொதுத் தேர்வும் நடத்தப்படும். இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கும் இடைத் தேர்வில் தேர்வை எழுதலாம்.உலக அளவில் நடக்கும் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.

 புதிய பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.பள்ளி நேரத்துக்குப் பிறகு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்துடன் தொழில்நுட்பம் மற்றும் கணினி கற்பிக்கப்படும். ஆசிரியர்களுக்கான கையேடுகள், மாணவர்களுக்கான செய்முறைக் கையேடுகள் வழங்கப்படும். இணைய வழி கற்றல், கற்பித்தலுக்கான அலைபேசி செயலிகள் உருவாக்கப்படும்.2018-ம் ஆண்டில்1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும்.

2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். 2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot