'பிளஸ் 1 தமிழ் பாட புத்தகத்தில், ராஜராஜ சோழன் பற்றிய தவறான தகவல், இந்த ஆண்டிலாவது திருத்தப்பட வேண்டும்' என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிளஸ் 1 தமிழ் பாடப் புத்தகத்தில், ஏழாவது பாடமாக, தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய, 'கல்வெட்டுகள்' பாடம் உள்ளது. அதில், தமிழில் கல்வெட்டுகள் தோன்றிய முறை, அவற்றின் உள்ளடக்கம், அவற்றை படியெடுத்து, பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதே பாடத்தில், மெய்கீர்த்தி தோன்றிய விதமும், அவற்றின் போக்கும் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதில், முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி எழுதப்பட்ட ஆண்டு, கி.பி., 893 என உள்ளது. ஆனால், முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி எழுதப்பட்ட ஆண்டு, கி.பி., 983 ஆகும். அதாவது, ஒரு நுாற்றாண்டு தவறாக அச்சிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். அதே எண்ணிக்கையில், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்காவும் தயாராகின்றனர்.அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு, தவறான வரலாற்று தகவல், தமிழக அரசால் புகட்டப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி திறக்கும் முன், இந்த வரலாற்று பிழையை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

History 11th kamparamayanthai elithiyavar thavaraka ulathu
ReplyDelete