மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2017-18ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு) ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இணையதளத்தில் (www.tnscert.org) இதற்கான விண்ணப்பங்கள் மே 31 (இன்று) காலை 10 மணிக்கு வெளியிடப் படும்.இதன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணைய தளத்தில் மாணவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்தபிறகு, ‘சேவ்’ (Save) பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர் பணம் செலுத்தும் தளம் தொன்றும். அதில் கட்டணம் செலுத்தலாம்.கட்டணம் செலுத்த டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கி சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். பொதுப்பிரிவு, பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.500, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மாணவர்கள் அளிக் கும் விவரங்கள் கலந்தாய்வில் சரிபார்க்கப்பட்ட பிறகே, சேர்க்கை உறுதி செய்யப்படும். இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஜூன் 21-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பங்கள் பதிவேற்ற கடைசி நாள், சிறப்பு இட ஒதுக் கீடு விவரங்களை இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment