CBSE : 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 26 May 2017

CBSE : 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 9-ல் தொடங்கி ஏப்ரல்29-ல் முடிவடைந்தது.
நாடு முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா,மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் கலந்துகொண்டனர்.மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், சிபிஎஸ்இ12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் மாணவர்கள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி (நாளை) காலையில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம் என்று சிபிஎஸ்இ மக்கள் தொடர்பு அதிகாரி ராமசர்மா அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வு முடிவில் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படுவதில்லை. இதேபோல தமிழக அரசும் இந்த ஆண்டில்இருந்து பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot