பேரவை கூட்டத் தொடர்: ஜூன் 15-இல் கல்வித் துறை மானியக் கோரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 7 June 2017

பேரவை கூட்டத் தொடர்: ஜூன் 15-இல் கல்வித் துறை மானியக் கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் வரும் 14 -ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட உள்ள துறை வாரியான மானியக் கோரிக்கை நாள் விவரத்தை பேரவைத் தலைவர் தனபால் புதன்கிழமை வெளியிட்டார். அதன்
விவரம்:

ஜூன் 14 வனம், சுற்றுச்சூழல் துறை. ஜூன் 15 பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர் கல்வித் துறை. ஜூன் 16 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. ஜூன் 19 எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. ஜூன் 20 நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை. ஜூன் 21 நகராட்சி நிர்வாகத் துறைகளின் விவாதம் தொடர்ச்சி. ஜூன் 22 நீதி நிர்வாகம், சிறைச் சாலைகள், சட்டத் துறை, சுற்றுலா-கலை-பண்பாடு.
ஜூன் 23 தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை. ஜூன் 24 சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை. ஜூன் 28 நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பாசனம்) ஜூன் 29 கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் துறை. ஜூலை 3 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை. ஜூலை 4 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை. ஜூலை 5 வேளாண்மைத் துறை. ஜூலை 6 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள். ஜூலை 7 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விவாதம் தொடர்ச்சி. ஜூலை 10 காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விவாதம் தொடர்ச்சி ஜூலை 11 மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்புத் துறை. ஜூலை 12 வணிக வரிகள், முத்திரைத் தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு.

ஜூலை 13 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை. ஜூலை 14 செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் -அச்சு, தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை. ஜூலை 17 போக்குவரத்துத் துறை. ஜூலை 18 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை. ஜூலை 19 பொதுத் துறை, மாநிலச் சட்டப் பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள், ஓய்வூதியக் கால நன்மைகள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot