ஆன்லைன் மூலம் 2,000 படிப்புகள்: அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தகவல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 11 June 2017

ஆன்லைன் மூலம் 2,000 படிப்புகள்: அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தகவல்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஸ்வயம் திட்டத்தின் மூலம் ஆன்லைன் வழியாக 2,000 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

தில்லி ஐஐடி-யில் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:

ஸ்வயம் திட்டம் ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இப்போது ஆன்லைன் வழியாக 380 படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஓராண்டில் 2,000 படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
இதுவரை 60,000 மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் பல்வேறு படிப்புகளை முடித்துள்ளனர். பள்ளிப் படிப்பு முடித்தவர்கள், இளநிலை, முதுநிலைப் படிப்பு முடித்தவர்களுக்கு என தனியாகப் பாடங்கள் உள்ளன. இணையத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு வசதியான நேரத்தில் பாடங்களைப் படித்துக் கொள்ள முடியும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள்' குறித்து அரவிந்த் சுப்பிரமணியன் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot