38,000 மரங்கள் நட்ட கோவை நடத்துனர்... சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 11 June 2017

38,000 மரங்கள் நட்ட கோவை நடத்துனர்... சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை

கோவையைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் யோகநாதன் 38,000 மரங்களை நட்டதற்காக, சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
யோகநாதன், கோவை மாநகரப் பேருந்து கழகத்திற்கு உள்பட்ட மருதமலை - காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தடம் எண் 70 பேருந்தில், நடத்துனராகப் பணிபுரிகிறார்.கடந்த 28 ஆண்டுகளாக, நடத்துனர் வேலை பார்க்கும் யோகநாதன், தனது இளம் வயதில் தொடங்கி, கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக, மரம் நடும் வேலையில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.வன உயிரினங்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அதற்காகவே இந்த மரம் நடும் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வருவதாகக் கூறுகிறார் யோகநாதன்.சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில், ' யோகநாதன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசுப் பேருந்து நடத்துனர்.

 தனி ஒருவனாக,கடந்த 28 ஆண்டுகளில் 38,000 மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார்.வன உயிரின பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர் இந்த செயலை செய்து வருகிறார்,' என்று குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot