அரசு பள்ளிகளில் 4,084 ஆசிரியர்நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 15 June 2017

அரசு பள்ளிகளில் 4,084 ஆசிரியர்நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.

அரசுப் பள்ளிகளில் 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். சிறப்பாக செயல்படும் பள்ளி களுக்கு ‘புதுமைப் பள்ளி’ விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. உறுப்பினர்கள் பேசி முடித்ததும் விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட் டையன் பேசினார். அப்போது அவர் 37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகளில் 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப் படும். அனைத்து வகையிலும்புதுமையான விதத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு‘புதுமைப் பள்ளி’ விருது வழங்கப்படும். நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் கூடிய புதிய பரிமாணத்தில் செயல்வழிக் கற்றல் முறை மாற்றி அமைக்கப்படும். இதனடிப்படையில் செயல்பாடு களுடன்கூடிய புதிய கற்றல் அட்டைகள் வழங்கப்படும்.தமிழகம் முழுவதும் 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் தலா 3 கணினிகள் கொண்ட கணினி வழிக் கற்றல் மையங்கள் 40 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும். 5,639 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்படும். மாண வர்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், மொழித் திறன்களை வளப்படுத்தவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஆசிரியர்களுக்கு விருது

அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களை ஊக்குவிக் கும் வகையில் சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.மேலும், 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும். சுயநிதி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி அளிக்கப்படும்.வெளிநாடு பயணம்தனித்திறன் கொண்ட மாண வர்கள், வெளிநாடுகளுக்கு கல்விப்பயணம் செல்ல அனுமதிக் கப்படுவர். தமிழக மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும்.ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 24 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி கருத்தரங்குகள் நடத்தப் படும். மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையவழியில் அனுமதி, அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் வழங்கப்படும்.

மதுரையில் பிரம்மாண்ட நூலகம்

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்.மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் ஒரு லட்சம் நூல்கள் அடங்கிய மாபெரும் நூலகம் ரூ.9 கோடியில் ஏற்படுத்தப்படும். சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த 8 சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்படும். தனியார் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

யாழ் நூலகத்துக்கு நன்கொடை

உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்களை கொடையாக வழங்கும் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக யாழ்ப் பாணத்தில் உள்ள பொது நூலகத் துக்கும் மலேசிய பல்கலைக்கழகத் துக்கும் பொதுமக்களிடம் இருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள் கொடை யாகப் பெற்று வழங்கப்படும்.தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.13 கோடியே 12 லட்சத்தில் விளையாட்டு உயிர் இயந்திரவி யல் முதன்மை மையம் அமைக் கப்படும். மேலும், ரூ.5 கோடியில் விளையாட்டு விடுதியும் கட்டப் படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot