தரம் உயரும் பள்ளிகளுக்கான அரசாணை தாமதம் : 50 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 6 June 2017

தரம் உயரும் பள்ளிகளுக்கான அரசாணை தாமதம் : 50 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம்.

நடப்பு கல்வியாண்டில், தரம் உயர்த்தப்படும், 250 பள்ளிகளுக்கான அரசாணை வெளியாவதில் தாமதமாவதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை வீணாகும் அபாயம் உள்ளது.

'நடப்பு கல்வியாண்டில், 150 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்; 100 உயர்நிலைப் பள்ளி கள், மேல்நிலைப் பள்ளி களாகவும், தரம் உயர்த்தப் படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 'எந்தெந்த இடங்களில் தரம் உயர்வு தேவை என்பதை ஆய்வு செய்து, பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர், சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனாலும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் குறித்த பட்டியலும், அது தொடர்பான அரசாணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் எதுவென தெரியாமல், மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை.

மேலும், பள்ளிகளை தாமதமாக தரம் உயர்த்து வதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை வீணாகும் அபாயம் உள்ளது. அதாவது, 100 மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு பாடப்பிரிவுகளில், 20 ஆயிரம்; 150 உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது, ௧௦ம் வகுப்புகளுக்கு, 30 ஆயிரம் இடங்கள் என, ௫௦ ஆயிரம் இடங்களில், மாணவர்களே இல்லாமல், ஓர் ஆண்டை கழிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஏதோ சில காரணங்களுக்காக, அரசாணையை வெளியிடுவதில், அரசு தாமதம் செய்கிறது. பள்ளிகளை தரம் உயர்த்த, ௫௦௦ கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப் படலாம். 'இதனால், அந்த நிதி வீணாவதுடன், தரம் உயரும் பள்ளிகளில், நடப்பு ஆண்டில், மாணவர்கள் சேர முடியாத நிலைமையும் உருவாகும்' என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot