ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு: 'பிட்ஜீ' மாணவர்கள் சாதனை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 11 June 2017

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு: 'பிட்ஜீ' மாணவர்கள் சாதனை

தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கானநுழைவுத் தேர்வில், 'பிட்ஜீ' பயிற்சி மைய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின.
இதில், சென்னை பிட்ஜீ பயிற்சி நிறுவன மாணவர் கவுதம், அகில இந்திய அளவில், 40வது, 'ரேங்க்' பெற்று சாதித்துள்ளார். சென்னை மையத்தில், ௩௦௦ பேர் உட்பட, அகில இந்திய அளவில், பிட்ஜீ மையத்தில்படித்த, 4,250க்கும் மேற்பட்ட மாணவர்கள், தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனர். இவர்களில், இரண்டு பேர் முதல், 100 இடங்களிலும்; ஆறு பேர், 200 இடங்களுக்குள்ளும், 25 பேர் முதல், 1,000 இடங்களுக்குள்ளும் வந்துஉள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், தரவரிசையில் முன்னிலை பெற்ற, கவுதம், ஸ்ரீராம், நந்தகோபால், ஆகாஷ், பிரணவ் ராமகிருஷ்ணன், சிவ சுப்ரமணியன் உள்ளிட்ட பல மாணவர்களுக்கு, பிட்ஜீ மைய பேராசிரியர்களும், மாணவர்களின் பெற்றோரும் வாழ்த்து தெரிவித்தனர்.இது குறித்து, பிட்ஜீ இயக்குனர், அன்கூர் குமார் ஜெயின் கூறியதாவது: அனைத்து பாடத்திட்ட மாணவர்களும், ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற முடியும். தொடர் பயிற்சியும், புரிதலும் இருந்தால், தரவரிசையில் முன்னிலை பெறலாம். இந்த தேர்வில், வினாக்களுக்கான விடைக்குறிப்பு தவறாகவோ, ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ இருந்தால், 'போனஸ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பிட்ஜீ மைய பயிற்சியாளரும், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருமான, எம்.தியாகராஜன் கூறியதாவது: மாநில பாடத்திட்டமும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமும் ஒன்று போன்றே உள்ளது.சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 'பிராப்ளம் சால்விங்' என்ற முறையில் கற்றுத் தரப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தையும், இந்த அடிப்படையில் கற்றுத் தந்தால், அதிக மாணவர்கள் வெற்றி பெறலாம். பிட்ஜீயில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 1 பாடம் முக்கியம்

கவுதம் கூறியதாவது: என் தாத்தா, பாட்டியின் முழு ஒத்துழைப்பால், ஜே.இ.இ., தேர்வில், தேசிய அளவில், 40வது, 'ரேங்க்' எடுத்துள்ளேன். பெங்களூரிலுள்ள, ஐ.ஐ.எஸ்.சி., அறிவியல் நிறுவனத்தில் படிக்க விரும்புகிறேன். அடிப்படை கல்வியான, பிளஸ் 1 பாடங்கள் மிக முக்கியம்; அதை படிக்காவிட்டால், தேர்ச்சி கடினம். இவ்வாறு அவர் கூறினார். கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்த, கவுதமின் பெற்றோர், டாக்டர்கள்; 2006ல், மின் கசிவால் ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டனர். தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் படித்து, 360க்கு, 350 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

'தொடர் பயிற்சி அவசியம்' :

தரவரிசையில், முக்கிய இடங்களை பிடித்த மாணவர்கள் கூறியதாவது:நந்தகோபால்: பாலக்காட்டைச் சேர்ந்த நான், ஸ்ரீபெரும்புதுார், மகரிஷி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துள்ளேன்; 93வது ரேங்க் பெற்றுள்ளேன். பயிற்சி இல்லாமல், ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற முடியாது. பிட்ஜீயில், பிளஸ் 1 படிக்கும் போதே சேர்ந்து, தேர்ச்சி பெற்றுள்ளேன். சிவசுப்ரமணியன்: ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சிகள் இருக்க வேண்டும். குறிப்பாக பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள அடிப்படை பாடங்களை படிக்காவிட்டால், தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாது. அதற்கு ஏற்ப, மாணவர்கள் தயாராக வேண்டும்.

மாநில பாடத்திட்ட மாணவர் சாதனை :

ஜே.இ.இ., தேர்வில், மாநில பாடத்திட்டத்தில், கிருஷ்ணகாந்த் என்பவர், 462வது தரம் பெற்றுள்ளார். மொத்தம், 360க்கு, 281 மதிப்பெண் பெற்றுள்ளார். பிட்ஜீ மாணவரான இவர், திருமழிசையில் உள்ள சென்னை பப்ளிக் பள்ளியில் படித்தவர். தேசிய அளவிலும், பள்ளிகள் அளவிலும், ஏற்கனவே நடந்த பல தேர்வுகளிலும், முன்னிலை பெற்றவர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot