- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 21 June 2017

சர்வதேச  யோகா தின விழா
தினமும் யோகா செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும்
காவல் ஆய்வாளர் பேச்சு
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச யோகா தின விழா நடைபெற்றது.


                   விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முத்துகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,உடற்கல்வி முக்கியம் ஆகும்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும்போது பல நல்ல விசயங்கள் நமது மனதுக்கும்,உடலுக்கும் கிடைக்கும்.மாணவர்களாகிய நீங்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதற்கும்,யோகா செய்வதற்கும் இந்த சிறு வயதில் பழகி விட்டால் உங்களின் வாழ்க்கை பிற்காலத்தில் பிரகாசமாக இருக்கும்,தினமும் யோகா செய்யுங்கள்.மன நிம்மதி அடையுங்கள்.பெற்றோர் ,பெரியவர்கள் சொல்லும் நல்ல விசயங்களை கடைபிடியுங்கள்.உங்களின் பள்ளி ஆசிரியர்கள் உங்களுக்கு பல வழிகளில் நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள்.அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.என்று பேசினார்.விழாவில் மாணவர்கள் ராஜேஷ்,ரஞ்சித்,விக்னேஷ்,ஆகியோர் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.யோகா தொடர்பாக ஆங்கிலத்தில் மாணவர் ரஞ்சித்தும்,தமிழில் மாணவர் விக்னேஷும் பேசினார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார்.விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார் யோகா தினம் தொடர்பாக பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உடன் உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot