அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியல் வெளியீடு: கல்வித் தரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 13 June 2017

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியல் வெளியீடு: கல்வித் தரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு கல்லூரியி லும் கல்வித்தரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை, புதிதாக சேரப் போகும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் அண்ணா பல் கலைக்கழகக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியி யல் கல்லூரிகள் உள்ளன. இவைஅனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கிவரு கின்றன.அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 3 ஆண்டுகளாக, மாணவர்கள் பெறும் ரேங்க் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், பொறியி யல் கல்லூரிகள் வாரியாக தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல் கலைக்கழகம் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட் டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வுகளில் பிஇ, பிடெக் மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை கல்லூரிகள் வாரியாக தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கல்லூரியிலும் எத் தனை மாணவர்கள் தேர்வு எழுதினர், அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர், தேர்ச்சி விகிதம் ஆகிய விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்ச்சி விகிதப் பட்டியல் பெரிதும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகிதத்தை அறிந்துகொள்வதன் மூலம், அந்தக் கல்லூரியின் கல்வித் தரத்தை மாணவர்கள் ஓரளவு ஊகிக்கமுடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot