அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 27 June 2017

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்கள்


TEACHERS REACTIONS ON HIGH COURT VERDICT

அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.

நீதிபதிகள் தொடங்கி அரசியல் விவாதிகள் வரை அரசு மருத்துவமனையில்   சிகிச்சை பார்க்க வேண்டும் .

அரசு ஊழியர்களின் குழந்தைகள்:-
அரசு பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் குழந்தைகள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அரசு மருத்துவ கல்லூரியில்​ (Government medical college -ல்)MBBS இடமளிக்க வேண்டும்
அரசு ஊழியர்களின் குழந்தைகள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அரசு பொறியியல் கல்லூரியில்​ Government Engg. college -ல் / ANNA UNIVERSITY -ல் இடமளிக்க வேண்டும்
அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் ஏன் சேர்க்கக்கூடாது????
இவ்வாறு நீதிபதிகள் ஆணையிட்டால் அனைத்து தரப்பினரும் வரவேற்பார்களா?


1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?

2.தனியார் பேருந்துகளில் கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?

3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.

4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?

5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?

6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.

7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?. அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லையா?

8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.

9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரசுபள்ளியின் வளர்ச்சியை.

எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot