இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 1 June 2017

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.
இதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

10 comments:

  1. பால்வாடி டீச்சர்களுக்கும் இட ஒதுக்கீடு உண்டா?

    ReplyDelete
  2. பால்வாடி டீச்சர்களுக்கும் இட ஒதுக்கீடு உண்டா?

    ReplyDelete
    Replies
    1. If anyone have pg with B.Ed qualification who can apply for pg trb.doesn't matter who secondary grade or others. Don't be silly

      Delete
    2. முதுகலை ஆசிரியர் மொத்த பணியிடம் 3326 அதில் 50% அதாவது 1663 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு மீதி 50% அதாவது 1663 ல் நேரடி பணி மூலம் தேர்வு செய்வர் ஆனால் தற்போது இதில் 10% அதாவது 166 இட ஒதுக்கீடு இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆகவே இதில் நேரடி ஆசிரியர் தேர்வாகும் அனைவருக்கும் பின்னடைவை ஏற்படுத்திவுள்ளது. இதை கட்டாயம் கண்டிக்கிறோம். இதை எதிர்த்து வழக்கு தொடர வேண்டும்.

      நல்ல அரசாங்கம் டா வேலை ல இருக்குறவனுக்கே மருபடியும் வேலை கொடுங்கடா புதுசா எவனுக்குமே வேலை கொடுங்கடா.டேட் க்கு படிச்சன் weighடகெ வச்சி என் வாழ்கைய கெடுத்திங்க சரி இப்போ முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு படிச்சன் இதுலயும் மண்ண வாரி போடுரீங்களே என்னடா நியாயம் ?

      Delete
  3. Pls posting 1111 normal roll details my mark 82 and Wight age mark 59.3

    ReplyDelete
  4. My wife SHIYAMALA A TET 2014 MARK'S 82 WIGHT AGE MARK'S 59.3 CAST MBC , DIFFERENCE sit already publish pls detail to all 1111 இதில் உள்ள இடத்தில் Army sit

    ReplyDelete
  5. My wife SHIYAMALA A TET 2014 MARK'S 82 WIGHT AGE MARK'S 59.3 CAST MBC , DIFFERENCE sit already publish pls detail to all 1111 இதில் உள்ள இடத்தில் Army sit

    ReplyDelete
  6. இதில் குழப்பம் அடைய ஒன்றும் இல்லை.
    இடைநிலை ஆசிரியர்கள் பலர் முதுகலை ஆசிரியர் ஊதியத்தை கடந்து இருப்பார்கள்.வழக்கு, வழக்கு,என்று காலத்தை வீணாக்காமல் படிப்போம்.அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது. கல்வித்துறையில் இது புதிது காவல் துறையில் இதே முறை உள்ளது . Policeக்கு dsp தேர்வில் 10% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது

    ReplyDelete
  7. இதில் குழப்பம் அடைய ஒன்றும் இல்லை.
    இடைநிலை ஆசிரியர்கள் பலர் முதுகலை ஆசிரியர் ஊதியத்தை கடந்து இருப்பார்கள்.வழக்கு, வழக்கு,என்று காலத்தை வீணாக்காமல் படிப்போம்.அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது. கல்வித்துறையில் இது புதிது காவல் துறையில் இதே முறை உள்ளது . Policeக்கு dsp தேர்வில் 10% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது

    ReplyDelete
  8. *குழம்ப வேண்டிய அவசியமில்லை*
    🔊இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு சலுகையை அள்ளி வழங்கவில்லை.

    🔊இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடியாக பதவி உயர்வு
    வழங்கவில்லை.

    🔊போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு.

    🔊 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியருக்கும் ஊதிய விகித வேறுபாடு வெறும் 200/ரூபாய் மட்டுமே.

    🔊பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பெற்று முதல் ஆண்டு உயர்விலே முதுகலை ஆசிரியர் ஊதியத்தை பெற்று விடுவார்கள்.

    🔊எனவே பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு கொடுத்தாலும் பலன் இல்லை.

    🔊கல்வித்துறையில் இது புதிது. காவல் துறையில் Police ஆக பணியாற்றுபவர்கள் Dsp போன்ற தேர்வு எழுதும் போது இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.

    🔊அதிக ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுபவர்கள். முதுகலை ஆசிரியர் ஆசிரியர் ஊதியத்தை கடந்து இருப்பார்கள் அவர்கள் யாரும் தேர்வு எழுத போவதில்லை.

    🔊பட்டதாரி ஆசிரியர்கள் குழப்ப வேண்டாம் 🙏

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot