அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 8 June 2017

அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!!


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.
சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கினார். விழாவில் அவர் கூறியதாவது:தமிழக அரசு வெளிப்படைத்தன் மையுடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாக ஆன்லைன் மூலம்கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப் பட்டன என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

ஆசிரியர்கள் எந்தவிதமான மன உளைச்சலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற இந்த அரசு என்றும் துணை நிற்கும். தற்போது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை யையும் மக்கள் கூர்ந்து கவனிக் கிறார்கள். கல்வித்துறையை மேம் படுத்துவதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும்.10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 20 லட்சம் பேருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு களை அனுப்பினோம். இது இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சரித்திர சாதனை ஆகும். பாகுபாடு காரணமாக மாணவர் களுக்கு ஏற்படும் மன உளைச் சலைத் தடுக்கும் வகையில் பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை இந்த ஆண் டிலிருந்து ரத்து செய்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு களுக்கான தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறோம்.இவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார்.

விழாவில் தென்சென்னை எம்பி டாக்டர் ஜெ.ஜெயவர்தன், தி.நகர் எம்எல்ஏ சத்யா, விருகம்பாக்கம் எம்எல்ஏ விருகை ரவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்மாண வர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு கள், சீருடை, காலணி, லேப்-டாப், சைக்கிள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. தற்போது முதல்கட்டமாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகிய மூன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. எஞ்சியவை விரைவில் வழங்கப்படும். பள்ளி திறந்த முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வைக்கப்போகிறார்களே, வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மாணவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அச்சத் தைப் போக்கும் வகையில் ஒரு வாரத்தில் அவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். அப் போதுதான் அதற்கேற்ப ஆசிரியர் கள் பயிற்சி அளிக்க முடியும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாண வர்களைத் தயார்படுத்த அவர்க ளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கு சனிக்கிழமை தோறும் 3 மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். கல்வி என்பது ஒருவரின் மனநிலையைப் பொறுத்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெறுவோர் பெரும்பாலும் அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் கூட தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். ஜூன் 15-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது 40-க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

 இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்வரை, மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot