தபால் தேர்வில் முறைகேடு: ஹரியானாவசிகளின் தமிழ் புலமை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 3 June 2017

தபால் தேர்வில் முறைகேடு: ஹரியானாவசிகளின் தமிழ் புலமை

தமிழ் நாட்டிற்கான தபால் தேர்வில் ஹரியானாவை சேர்ந்த பலரும் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சி.பி.ஐ விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

தமிழ் நாடு வட்டாரத்திலுள்ள தபால் ஊழியர் மற்றும் அஞ்சல் காவலாளர்களுக்கான 128 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 11, 2016 அன்று தமிழ் நாட்டிலுள்ள 5 மையங்களில் நடைபெற்றது. எழுத்து தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய நான்கு பாடங்களில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவார்.

இன்னிலையில் இதற்கான தேர்வு முடிவு மார்ச் 2017-ல் அறிவிக்கப்பட்டது. அதில் ஹரியானாவைச் சேர்ந்த பலரும், மேலும் ஹரியானாவிலிருந்து பதிவு செய்த மகாராஸ்டிரா மற்றும் பஞ்சாபை சேர்ந்தவர்களும் தமிழில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் ஏதோ தவறுள்ளதாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்த விசாரணை துவங்கப்பட்டது.

தமிழில் அதிக மதிப்பெண் வாங்கிய ஹரியானாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஹரியானா மாநில கல்வி முறையின் கீழ் பயின்றவர்கள், அதன்படி தமிழ் மொழி அவர்களின் பாடத்திட்டத்திலேயே கிடையாது. விசாரணையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த போதிலும் ஹரியானாவைச் சேர்ந்த 47 விண்ணப்பதாரர்கள் ஒரே ஐபி முகவரியில் உள்ள கணினியை உபயோகித்ததும், மேலும் 36 விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்ததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.  

விசாரணையில் ஏதோ சில பொதுத்துறை அதிகாரிகளின் உதவியோடு விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் இடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் அரசு ஆன்லைன் தேர்வு முறைகளின் மேலுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot