76 ஆயிரம் பேர் தேர்வு எழுதும் கற்கும் பாரதம் திட்டம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 21 July 2017

76 ஆயிரம் பேர் தேர்வு எழுதும் கற்கும் பாரதம் திட்டம்

நாட்டில் கிராமப்புறங்களிலுள்ள வாழும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், சிறுபான்மையினர், ஏழைகள், அதிலும் குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் வகையில் 2009 ஆம் ஆண்டில் வயது வந்தோருக்கான எழுத்தறிவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழகத்தில் கற்கும்பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  தமிழத்தில் பெண்களுக்கு எழுத்தறிவு ஐம்பது சதவீதத்திற்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் கற்கும் பாரதம் திட்டம் செயல்டுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்பது மாவட்டங்களில் படிக்க விரும்பும் மக்களுக்கு அவர்களின் ஓய்வு நேரங்களில்  கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலுமுள்ள படித்தவர்களை கொண்டு அவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. பாடம் நடத்த குறிப்பிட்ட இடம் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை. எழுத்துக்கூட்டி படிக்க விரும்புபவர்கள்  எங்கு  வரச்சொல்கிறார்களோ அங்கு சென்று  பாடம் கற்பித்து வருகிறார்கள்.

அப்படி கற்பவர்களில் 76,487 பேர், வருகிற ஆகஸ்டு 20 ஆம்தேதி தேர்வு எழுதுகிறார்கள். அவர்களுக்கு தமிழ்,கணினியியல்,சூழ்நிலைஇயல், பேரிடர்மேலாண்மை, தேர்தல் விழிப்புஉணர்வு, நிதிநிர்வாகம் உட்பட பல தலைப்புகளில் பாடப்புத்தகங்கள் விலை இன்றி கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த  வகுப்புகளுக்கு புராமோட் செய்து கற்பித்து வருகிறார்கள். கற்கும் பாரதம் திட்டத்தை தமிழகத்தில் பள்ளிசாரா கல்வி இயக்கம்  சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தால், கற்காதவர்களே தமிழத்தில் இல்லை என்று சொல்லும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot