7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 28 July 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பேசினோம்.

அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.அதில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், தொழில் வரி ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விரிவாக விவாதித்தோம்.

இடைக்கால நிவாரணம் குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசிமுடிவு செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். புதியபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசுஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்ற பிறகு, அந்த திட்டத்தை ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராயும் என்று உறுதி அளித்துள்ளார்.

மாநிலத்துக்கான 7-வது ஊதியக்குழு அறிக்கைகளைப் பெற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அதுபோன்ற அனைத்துவகை பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. விரைவில் இதற்கான அரசாணைகளையும் அவர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot