ஜாக்டோ- ஜியோவில் இருந்து அரசுப் பணியாளர் சங்கம் விலகல் அறிவிப்பு.

அரசுப் பணியாளர்கள்- ஆசிரியர் கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோவில் இருந்து அரசு பணியாளர் சங்கம் விலகியது. ஆகஸ்ட் 4-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர்கள், அரசுப் பணி யாளர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கூட்ட மைப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் புறக்கணிக்கப் பட்டதால் ஜாக்டோ - ஜியோவில் இருந்து விலகுவது என பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதியக்குழு பரிந்துரை அமல், 25 சதவீத இடைக்கால நிவாரணம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தோழமை, இணைப்புச் சங்கங் களின் உதவியுடன் ஆகஸ்ட் 4-ம் தேதி, சென்னையில் உண்ணா விரதம் நடத்துவது என முடிவெடுக் கப்பட்டுள்ளது. மேலும், நாளை 18-ம் தேதி நடக்கும் ஜாக்டோ- ஜியோவின் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத் தினர் பங்கேற்க மாட்டார்கள்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
 

Most Reading