தொடக்கப்பள்ளிக்கு கணினி வினியோகிப்பது எப்போது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 26 July 2017

தொடக்கப்பள்ளிக்கு கணினி வினியோகிப்பது எப்போது

தமிழகம் முழுக்க, தொடக்கப் பள்ளிகளில் கல்விசார் பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.அரசுப் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்ட பழைய கம்ப்யூட்டர்களுக்கு பதிலாக, புதிய கம்ப்யூட்டர்கள் வாங்க, நிதி ஒதுக்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபையில் தெரிவித்தார்.

இது, தலைமையாசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், தொடக்கப் பள்ளிகளுக்கு அலுவலக பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் இல்லை. தனியார் பிரவுசிங் சென்டர்களில், கல்வித்துறை கோரும் விபரங்கள் அனுப்புவதால், தகவல்களின் ரகசியம் காக்க முடியாத நிலை உள்ளது.ஈராசிரியர் பள்ளிகளில், கணினிசார் அலுவலக பணிகள் மேற்கொள்ள ஒருவர் செல்வதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளின் நிலையை, வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு, மோசமாக உள்ளது.பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில், புதிய மாணவர்களின் விபரங்களை பதிவு செய்தல், நலத்திட்ட பொருட்களின் விபரங்கள், உதவித்தொகை திட்டங்கள் என, கல்வித்துறை சார்பில், புள்ளிவிபரங்கள் அளிக்குமாறு, வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 இ-மெயில் அனுப்பப்படுகிறது. இதற்கு, பதிலளிக்க கம்ப்யூட்டரோ, இணையதள வசதியோ இல்லாததால், தலைமையாசிரியர்கள் பெரிதும் சிரமப்படும் நிலை நீடிக்கிறது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது:கல்வித்துறை திட்டங்களால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.

இதை தக்க வைத்து கொள்ள, பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.தமிழகத்தில், 70 சதவீத தொடக்கப் பள்ளிகளில் சுற்றுச்சுவர் கிடையாது. இரு வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், அனைத்து வகுப்பு மாணவர்களையும் அருகருகே அமர வைத்து பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. அலுவலக பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் இல்லை. இதை அறிந்தும், கல்வித்துறை அனைத்து விபரங்களை இ-மெயில் அனுப்புமாறு உத்தரவிடுவது கேலிக்கூத்தாக உள்ளது.

தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு செலவழிக்கப்படும் பணத்திற்கு, ரசீது சமர்ப்பித்தாலும், திருப்பியளிப்பதில்லை. டிஜிட்டல்மயத்தை நோக்கி, அனைத்து துறைகளும் வேகமாக நகர்கின்றன. எனவே, தொடக்கப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், இணையதள வசதி ஏற்படுத்தி தர, கல்வித்துறை முன்வர வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot