தவறுகளை சுட்டிக்காட்டினால் போராட்டம் அறிவிப்பதா? ஆசிரியர் சங்கங்களுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 7 July 2017

தவறுகளை சுட்டிக்காட்டினால் போராட்டம் அறிவிப்பதா? ஆசிரியர் சங்கங்களுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை.

மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தராத ஆசிரியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்த திட்டமிடுவதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அப்படி போராட்டம் நடத்த அறிவித்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரைணக்கு வந்தபோது, மாணவர்களின் கல்வித் தரம் உயர அரசிடம் இந்த நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.நீதிபதி அளித்த உத்தரவில், “ கடந்த 2012 ஜூலை 17ம் தேதி அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அரசு ஏன் கட்டாய உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளுக்கு ஜூலை 14ம் ேததிக்குள் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்த 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேர் தோல்வி அடைந்ததை எதிர்த்தும், அந்த மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கே ஒழுங்காக செல்வதில்லை.

இதுகுறித்து எனக்கு 1500க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன.  பள்ளி நாட்களான 165 நாட்களில் 65 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படி பள்ளிக்குச் சென்றால் அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியுமா?  சம்பளம் மட்டும் அதிகம் வாங்குகிறார்கள். கடமையை செய்யாமல் அவர்கள் சாப்பிடுவது எப்படி ஜீரணிக்கும்.

ஒரு சில பள்ளிகளில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே படிக்கிறான்.  அதற்கு அந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள், 2 பணியாட்கள். இவர்களால் எப்படி கல்வி தரத்தை உயர்த்த முடியும். மாணவர்கள் நலன் கருதி நீதிமன்றம் கேள்விகளை எழுப்பினால் அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா? பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கற்று தருவதை விட்டுவிட்டு சிறு வயதிலேயே குழந்தைகள் செல்போன், இன்டர்நெட்டில் விளையாடுவதை ரசிக்கிறார்கள்.

 மாணவர்களை 8ம் வகுப்பு வரை பெயிலாக்க கூடாது என்ற சட்டம் உள்ளதால் அதுவரை அந்த குழந்தைகளை பற்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலைப்படுவதில்லை. 9ம் வகுப்புக்கு அந்த மாணவர் வரும்போது, அவர்கள் மீது எல்லா கல்வி சுமையையும் சுமத்துகிறார்கள். இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதை நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா? அந்த ஆசிரியர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட  வேண்டி வரும்” என்று நீதிபதி கூறினார்.

 மேலும், ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேரின் தேர்ச்சி தொடர்பான வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன்.அப்போது, ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot