தொழிலாளர் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 31 July 2017

தொழிலாளர் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை

'தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

 தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள, தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, பல்வேறு பிரிவு களில்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், பிளஸ் 1 முதல், முதுகலை பட்டப் படிப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கு, பாடநுால் உதவி, மேல்நிலைக் கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது

 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை; மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் படிப்புகளுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித் தொகை பெற, அக்டோபர், 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும்

 மேலும் விபரங்களுக்கு, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை' என்ற முகவரி; 044- - 2432 1542 என்ற தொலைபேசி எண் மற்றும், www.labour.tn.gov.in என்ற, இணைய தள முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot