PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 12 July 2017

PGTRB :முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விரைவில் 'கீ ஆன்சர்' வாரியதலைவர் தகவல்.

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெகநாதன் தெரிவித்தார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணிகளில் 1,663 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நேரடியாக நிரப்பும் வகை யில் ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்தனர். எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடை பெற இருந்த நிலையில், தேர் வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக கூடுதலாக 1,712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து காலியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கடந்த 2-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் தேர் வெழுதினர். தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் கவலை தெரிவித்தனர். தேர்வு முடிந்த அன்றைய தினமே தனியார் பயிற்சி மையங்கள் இணை யதளத்தில் உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) வெளியிட்டன. ஒருசில கேள்விகளுக்கான விடைகள் சரியாக தெரியாததால் அவற்றுக்கு விடைகள் குறிப் பிடப்படவில்லை. தனியார் பயிற்சி மையங்கள் கீ ஆன்சர் வெளி யிட்டாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் கீ ஆன்சர் தான் அதிகாரப்பூர்வமாக ஏற்கப் படும்.

வாரியத் தலைவர் விளக்கம் எனவே, தேர்வெழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது கீ ஆன்சரை வெளியிடும்? என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருமான (பொறுப்பு) ஜெகநாதனிடம் கேட்டபோது, "முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கீ ஆன்சரை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் கீ ஆன்சர் வெளியிடப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot