RMSA : பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி ஜூலை 10-ல் தொடங்குகிறது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 5 July 2017

RMSA : பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி ஜூலை 10-ல் தொடங்குகிறது.

கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி அளிக்கப்படஉள்ளது.
பாடவாரியாக வழங்கப்படும் இப்பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது.இதுதொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின்மாநில திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-அனைவருக்கும் கல்வி இயக்கமும் (எஸ்எஸ்ஏ), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமும் (ஆர்எம்எஸ்ஏ) இணைந்து ஆசிரியர்களுக்குப் பணியிடைப்பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) அனைத்துப்பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 19 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல், கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல், தமிழ் ஆசிரியர்களுக்குப் பாடவாரியாக 5 நாட்கள் பாடக்கருப்பொருட்கள் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி நாள் விவரம் வருமாறு: அறிவியல் - ஜூலை 10 முதல் 14 வரை, கணிதம் - ஜூலை 17 முதல் 21 வரை, ஆங்கிலம் - ஜூலை 24 முதல் 28 வரை, சமூக அறிவியல் - ஜூலை 31 முதல் ஆகஸ்டு 4 வரை, தமிழ் - ஆகஸ்டு 7 முதல் 11 வரை நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot