நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு: 1,953 பணியிடங்களுக்கு 7.50லட்சம் பேர் போட்டி - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 4 August 2017

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு: 1,953 பணியிடங்களுக்கு 7.50லட்சம் பேர் போட்டி

டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 1,953 காலி பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள்.
தமிழக அரசின் துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங் கள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நேரடியாக நிரப் பப்படுகின்றன. பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக கொண்ட இப்பணிக்கு எழுத்துத்தேர்வு அடிப்படையில்தான் பணியாளர் கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வு எதுவும் கிடை யாது.இந்த நிலையில், பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள உதவியாளர் பதவி, தலைமைச் செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி ஆகியவற்றில் 1,953 காலியிடங் களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அண்மையில் குருப்-2ஏ-தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இத்தேர்வுக்கு 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.குரூப்-2ஏ எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

அதன்படி, எழுத்துத்தேர்வு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.தேர்வில், பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்வி களுக்கும், பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகளுக்கும் (மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்) விடையளிக்க வேண்டும். குரூப்-2ஏ பணிக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்பதால் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு பணி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot