முதல்கட்ட கலந்தாய்வு நாளை முடிவடைகிறது பொறியியல் படிப்புக்கான இதுவரை 79,315 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 9 August 2017

முதல்கட்ட கலந்தாய்வு நாளை முடிவடைகிறது பொறியியல் படிப்புக்கான இதுவரை 79,315 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை

பொறியியல் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடை கிறது. இதுவரை 79 ஆயிரத்து 315 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப் பட்டுள்ளதாக அண்ணா பல் கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வோடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினர், விளையாட்டுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலை யில், அகாடமிக் எனப்படும் பொது கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 7 மணிக்கு தொடங்கும் கலந்தாய்வு இரவு 7 மணிக்கு மேல் நீடிக்கிறது.

 தினமும் 9 அமர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், 18-வது நாளான நேற்று 7,385 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3.160 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். பங்கேற்றவர்களில் 4,198 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. கலந்தாய்வில் கலந்துகொண்ட போதிலும் 27 பேர் கல்லூரியை எதையும் தேர்வுசெய்யாமல் சென்றுவிட்டனர். இதுவரை, 79 ஆயிரத்து 315 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்தார். இன்று நடைபெறும் கலந்தாய்வுக்கு 108 முதல் 97.25 வரையிலான கட் ஆப் மதிப்பெண் உடையவர்கள் அழைக்கப்பட்டுஇருக்கிறார்கள். முதல் கட்ட கலந்தாய்வு நாளையோடு முடிவடைகிறது.

கடைசி நாள் கலந்தாய்வுக்கு 95.25 முதல் 86.25 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றிருப்பவர்களும், கலந்தாய் வில் பங்கேற்க தகுதி படைத்த அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பித்தவர் களின் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளி யிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து கலந்தாய்வு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot