வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 81.71 லட்சம் பேர் பதிவு தமிழக அரசு தகவல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 9 August 2017

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 81.71 லட்சம் பேர் பதிவு தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல் வருமாறு:-
கடந்த ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 21 லட்சத்து 9 ஆயிரத்து 926 பேர், 18 முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் 21 லட்சத்து 66 ஆயிரத்து 31 பேர் ஆகியோர் தங்களது பள்ளிக்கூடம் மற்றும் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

அரசுப் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் 24 முதல் 35 வயது வரையான நபர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 275 ஆகும். 35 வயது முதல் 56 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 4 ஆயிரத்து 531 ஆகும். 57 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 709 ஆக உள்ளது. அதன்படி, மொத்தம் 81 லட்சத்து 71 ஆயிரத்து 472 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot