பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் 33 மடங்கு அதிக கட்டணம்: விண்ணப்ப விநியோகம் தொடங்கியது - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 7 August 2017

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் 33 மடங்கு அதிக கட்டணம்: விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

பி.எஸ்சி, நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 பட்டப்படிப்புகளுக்கான விண் ணப்ப விநியோகம் தொடங்கியது. அரசு கல்லூரிகளைவிட தனியாரில் 33 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம்,பிஓடி ஆகிய 9 பட்டப்படிப்புகள் உள்ளன.இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது.

மாணவ, மாணவிகள் ஆர்வமாக வந்து விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.மாணவர்கள் விண்ணப்ப மனுவுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ‘செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ரூ.400-க்கான கேட்பு வரைவோலை (டிடி) இணைத்து அந்தந்த கல்லூரி முதல்வர்களிடம் கொடுத்து விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.சிறப்பு ஒதுக்கீடு பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் தனியாக ரூ.100-க்கான கேட்பு வரைவோலையை இணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விண்ணப்ப மனுவுடன் சான்றொப்பம் பெறப்பட்ட 2 சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெறலாம்.

ஆகஸ்ட் 23-ம் தேதி வரை தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்ப விநியோகம் நடைபெற உள்ளது. www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010’ என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதல் நாளான நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்விக் கட்டணம்

இந்த பட்டப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளைவிட தனியார் கல்லூரிகளில் 33 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் குறைந்தது ரூ.1,200 முதல் அதிகபட்சமாக ரூ.1,750 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் குறைந்தது ரூ.33 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot