அடையாள வேலை நிறுத்தம்; 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு அறிவித்துள்ளது.'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியதிட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 22ல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆக., 16 முதல், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை நடத்தவும், அடையாள வேலை நிறுத்தம் அன்று, அனைத்து தாலுகாக்களிலும், ஆர்ப்பாட்டங்கள்நடத்தவும் முடிவு செய்துள்ளது.அதன் பின்னும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், செப்., 7 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட, முடிவு செய்துள்ளது.
 

Most Reading