சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 16 August 2017

சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்கக் கோரிக்கை

சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பகுதிநேரஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்
தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், கல்வித் துறைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை,ஓவியம், தையல்) காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித் தேர்வுக்கு பணிநாடுநர்களிடமிருந்து 18.8.2017 தேதி வரை இணையவழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, 23.9.2017-இல் எழுத்து தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதில், 663 உடற்கல்வி, 327 ஓவியம்,86 இசை மற்றும் 249 தையல் பாட சிறப்பாசிரியர்கள் என மொத்தம் 1,325 சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் 2012-ஆம் ஆண்டுஅனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின்கீழ் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2014-இல் ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கினார்கள். இந்த, 16,549 பகுதிநேரஆசிரியர்களில் 5,033 ஓவியம், 4,941 உடற்கல்வி மற்றும் 5,195 தொழிற்கல்வி (இசை, தையல், கணினி அறிவியல், தோட்டகலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன்) என மொத்தம் 15,169 பகுதிநேர ஆசிரியர்களே தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.இதில் 6 ஆண்டுகளாக ரூ.7,000 குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்களில் 75 சதவீதம் பேர், தற்போது தேர்வுஅறிவிக்கப்பட்டுள்ளபாடப்பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ளவர்கள் தொழிற்கல்வி பிரிவைச் சேர்ந்த கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல்திறன் பாடப்பிரிவினர் ஆவர்.எனவே, தமிழக அரசு கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 15,169 பகுதிநேர ஆசிரியர்களை அங்கீகாரம் செய்ய ஏதுவாக அவர்களை முதலில் பணி நிரந்தரம் செய்து, அதன் பிறகு ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot