அக். 15ம் தேதி முதல் வேலை நிறுத்தம் - JACTTO-GEO GREAF அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 14 September 2017

அக். 15ம் தேதி முதல் வேலை நிறுத்தம் - JACTTO-GEO GREAF அறிவிப்பு.

அரசு ஊழியர், ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு இரண்டாக உடைந்தது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் எடுத்த முயற்சி காரணமாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டது.
இந்த குழுவுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் காலவரையற்ற போராட் டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள மற்ற சங்கங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  ஜாக்டோ-ஜியோ இரண்டு அணிகளாக உடைந்தது.  அதில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கணேசன், ஆசிரியர் சங்சத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் ஒரு அணியிலும், அதே தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் செயலாளராக இருந்த வெங்கடேசன், தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் மாயவன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தாஸ், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்தனர்.

அத்துடன் நில்லாமல் மாயவன் தலைமையிலான அணி போராட்டத்தை அறிவித்தது. தற்போது, கணேசன், இளங்கோவன் அணியினர் நேற்று தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி:  ஜாக்டோ-ஜியோ என்ற அமைப்பை  உருவாக்கியது நாங்கள்தான். அதனால் நாங்கள்தான் உண்மையான ஜாக்டோ-ஜியோ.

அங்கீகாரம் பெற்ற சங்கங்களை மட்டும் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது நாங்கள்தான் அதில் பங்கேற்றோம். அதனால் எங்களுடன் இருக்கின்ற சங்கங்கள்தான் உண்மையானவை.  12ம் தேதி இந்த சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் சண்முகநாதன் தலைமையிலான அரசு அலுவலர் ஒன்றியம் எங்களுடன் இணைந்தது. தற்போது எங்கள் அணி ஜாக்டோ-ஜியோ (கிராப்) என்று வைத்துள்ளோம்.

6ம் தேதி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், செப்டம்பர் 30ம் தேதிக்குள் 7வது ஊதிய ஆய்வுக்குழுவின் பரிந்துரையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அக்டோபர் 1ம் தேதி முதல் ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும். அப்படி காலதாமதம் ஆனால் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்கப்படும். பழைய ஓய்வூதியத்துக்காக அமைக்கப்பட்ட குழு நவம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாமல் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை அவகாசம் வேண்டும் என்றும் முதல்வர் ெதரிவித்தார்.

இதை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்தோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவோம் என்று நாங்கள் அறிவித்தோம். இன்றும் (நேற்றும்) அமைச்சரை சந்தித்து பேசினோம். அமைச்சரும் சொன்னபடி செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கணேசன், இளங்கோவன் தெரிவித்தனர். அப்போது, அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகநாதன் உடனிருந்தார். 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot