குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம்.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது.
இளநிலை உதவியாளர் பதவிக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 2,708 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) கலந்தாய்வில் 392 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன அலுவலர் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடை பெறும்.இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.