நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 12 September 2017

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் இடம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 4,700-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெற்றனர். ஒரு பங்கு இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டுகளில் பிளஸ்-2 மதிப்பெண்படி மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் படித்த 30 முதல் 35 மாணவர்கள் வரை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைக்கும்.இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 3 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்’ என்றனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot