ஆசிரியர்கள் போராட்டத்தில் அடக்கு முறையை ஏவினால் அரசுக்கு தோல்வி ஏற்படும் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 15 September 2017

ஆசிரியர்கள் போராட்டத்தில் அடக்கு முறையை ஏவினால் அரசுக்கு தோல்வி ஏற்படும்

ஆசிரியர்கள் போராட்டத்தில் அடக்கு முறையை தமிழக அரசுஏவினால், தோல்வியே கிடைக்கும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் ஜெயலலிதா ஸ்திரமான ஆட்சியை செய்ததோடு, ஆளுமைத் திறனால் உணவுப் பாதுகாப்பு சட்டம், ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, காவிரி உரிமை போன்றவற்றில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார்.ஆனால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அரசுகள், மத்திய அரசுக்கு அடிபணிந்து, தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டது. தமிழகத்தில் நிலையான அரசு இல்லை. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட பிறகு, சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்திருக்க வேண்டும்.ஆளுநராவது இதற்கு உத்தரவிட்டிருக்கவேண்டும்.

ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் அல்லது பதவி நீக்கம் செய்துவிட்டு குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அரசு மத்திய அரசின் ஆதரவோடு முயற்சிக்கிறது. இது ஜனநாயகப்படுகொலையாகும்.புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை துணை நிலை ஆளுநரே நியமிப்பதும், அவர்களுக்கு அவரே பதவிப் பிரமாணம் செய்துவைத்ததும் ஜனநாயக கேலிக் கூத்து. இதுபோன்ற பிரச்னைகளில் மாநில முதல்வர் மத்திய அரசை எதிர்த்துப் போராடாமல், மத்திய அரசோடு சமரசம் செய்துகொண்டு ஆட்சியில் நீடிக்க நினைப்பது தவறானதாகும். இந்த மனோபாவத்தை மாநில அரசு மாற்றிக்கொள்ளவேண்டும்.தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழுமானால், மறு தேர்தல் நடத்தப்படுவதையே நாங்கள் ஆதரிக்கிறோம்.தமிழகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 நீதிமன்றத்தின் கருத்துகளின் அடிப்படையில் அரசு, ஆசிரியர்கள் மீது அடக்கு முறையை ஏவ முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. இந்த நிலை ஏற்பட்டால் அரசுக்கு தோல்விதான் ஏற்படும். ஆசிரியர்களை அழைத்துப் பேசி அரசு பிரச்னைக்கு விரைவாக தீர்வுகாணவேண்டும் என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot